முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?
புதிதாக தொடங்கியுள்ள இந்த சைபர் யுத்தத்தை முஸ்லிம்கள் கவனமா கவே கையாள
வேண்டும். இது ஒரு வகை அறிவு யுத்தம். இதில் ஆயுதங் கள் உபயோகப்படுத்தப்படுவதில்லை.
ஆதலால் இதில் வேகப்படுவது புத்தி சாலித்தனம் அல்ல.. விவேகமே இதில் வெற்றியைத்
தரும்.
இதற்கான தீர்வுகள்
1 இதை வெளியிடும் இணையதள நிறுவனர்களிடம் நேரடியாக பேசி உண்மையை
விளக்கி இதை அப்புறப்படுத்த வேண்டும்.
4138 - أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ قَالَ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ عَنْ سُفْيَانَ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ
طَارِقِ بْنِ شِهَابٍ
أَنَّ
رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ وَضَعَ رِجْلَهُ
فِي الْغَرْزِ أَيُّ الْجِهَادِ أَفْضَلُ قَالَ كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ
رواه النسائي
1988 ஆண்டு சல்மான் ருஷ்டி சாத்தானின் கவிதைகள் The satanic verses எனும் நாவலை வெளியிட்டான்.அச்சமயத்தில் இந்தியாவின் மாமேதை பேரறிஞர் அபுல் ஹஸன் அலி நத்வி (ரஹ்) அவர்கள் தாமே நேரடியாக இந்நூலை வெளியிட்ட கேம்ப்பிரிட்ஜ் பல்கலை.க்கு சென்று அந்நாவலின் கருத்துகள் பொய்யானது என்பதை ஆதாரங்களை சமர்ப்பித்து நிரூபித்தார்கள்.
கேம்ப்பிரிட்ஜ் நிர்வாகம் வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டது. தமது நூலகத்தில் இருந்து அதை அகற்ற ஒப்புக் கொண்டது. அகற்றவும் செய்தது. இவ்வழியை முஸ்லிம்கள் கையாள வேண்டும்.
2. இதை இஸ்லாத்திற்கு
சாதகமாக மாற்ற வேண்டும்.
இதன் மூலம் எதிரிகள் இஸ்லாத்திற்கு
கெட்ட இமேஜை ஏற்படுத்த முயற்சிப்பதைப் போன்று இதன் மூலமே நாமும் இஸ்லாத்தை வளர்க்க
வேண்டும். தீமையையும் நன்மையாக மாற்றும் வலிமை நிச்சயம் முஸ்லிம்களுக்கு உண்டு.
5034 - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ
وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ إِسْحَقُ أَخْبَرَنَا و قَالَ عُثْمَانُ حَدَّثَنَا
جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ
اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَقَدْ وُكِّلَ بِهِ قَرِينُهُ
مِنْ الْجِنِّ قَالُوا وَإِيَّاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ وَإِيَّايَ إِلَّا أَنَّ
اللَّهَ أَعَانَنِي عَلَيْهِ فَأَسْلَمَ فَلَا يَأْمُرُنِي إِلَّا بِخَيْرٍ
حَدَّثَنَا
ابْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالَا حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ يَعْنِيَانِ
ابْنَ مَهْدِيٍّ عَنْ سُفْيَانَ ح و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا
يَحْيَى بْنُ آدَمَ عَنْ عَمَّارِ بْنِ رُزَيْقٍ كِلَاهُمَا عَنْ مَنْصُورٍ بِإِسْنَادِ
جَرِيرٍ مِثْلَ حَدِيثِهِ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ سُفْيَانَ وَقَدْ وُكِّلَ بِهِ
قَرِينُهُ مِنْ الْجِنِّ وَقَرِينُهُ مِنْ الْمَلَائِكَةِ
رواه مسلم
நவீன உலகில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தை முஸ்லிமல்லா தவர்கள் தவறான செய்கைகளுக்கே பயன்படுத்தி வந்தனர். பேஸ் புக் என்றாலே ‘தீமையின் பிறப்பிடம்’ என்றே பார்க்கப்பட்டது. தீமைக்கு பயன்பட்ட அதனை நன்மைக்கு பயன்படுத்த முடியும் என்று முஸ்லிம்கள் நிரூபித்தார்கள்.எகிப்து, துனிஷியா புரட்சியில் ‘பேஸ்புக்’ முக்கிய பங்கு வகித் தது.
சில
ஃபித்னாக்கள் மூலம் இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம் களுக்கு நன்மை ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக அன்னை
ஆயிஷா (ரழி) மீதான இட்டுக்கட்டு. அதற்காக நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம்
கவலைப்பட்டார்கள். என்றாலும் அதில் இந்த உம்மத்திற்கு பெரும் நன்மையை அல்லாஹ்
நாடியிருந்தான்.
قال الله تعالي: إِنَّ الَّذِينَ جَاءُوا
بِالْإِفْكِ عُصْبَةٌ مِنْكُمْ لَا تَحْسَبُوهُ شَرًّا لَكُمْ بَلْ هُوَ خَيْرٌ
لَكُمْ لِكُلِّ
امْرِئٍ مِنْهُمْ مَا اكْتَسَبَ مِنَ الْإِثْمِ وَالَّذِي تَوَلَّى كِبْرَهُ مِنْهُمْ
لَهُ عَذَابٌ عَظِيمٌ 24:11
ஆதலால் முன்னெப்போதும் இல்லாத
அளவுக்கு நபி(ஸல்) குறித்த நூல்களை உலமாக்கள் அதிகம் வெளியிட வேண்டும்.
சி.டி.வடிவில் உரைகளை வெளியிட வேண்டும். நபி(ஸல்) அவர் களின் பன்முகத்தன்மையை ஊடகங்கள், இணைய தளங்கள், தொலைக்காட்சி நேர்காணல்கள், பத்திரிகைகள், வழியாக நேரடி பிரச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டும்.
யூ ட்யூப் (youtube) போன்ற வீடியோ தளத்துக்கு நிகரான தளங் களை உருவாக்க வேண்டும்.
கடந்த காலங்களி்ல் அறிவியல் துறையில் நாம் கவனம் செலுத் தாததால் தான் இணையதளங்கள் அமெரிக்காவில் அடைபட்டு விட்டன. இணையதள இயக்குனரகங்கள் இஸ்லாமிய உலகில் இருந்தால் இதுவெல்லாம் நடக்குமா?
2611 - حَدَّثَنَا مُحَمَّدُ
بْنُ عُمَرَ بْنِ الْوَلِيدِ الْكِنْدِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ
عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْفَضْلِ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ
قَالَ
قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَلِمَةُ الْحِكْمَةُ ضَالَّةُ الْمُؤْمِنِ فَحَيْثُ وَجَدَهَا فَهُوَ
أَحَقُّ بِهَا رواه الترمذي وابن ماجه
3.உணர்ச்சிவசப்பட்டு,
மூர்க்கமான வகையில் கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது.
قال الله
تعالي: وَإِنْ
عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ
لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ 16:126
4.
இதனை பரப்பக்கூடாது.
இதனை அலட்சியப்படுத்தி விட்டு. இனிமேல் அவ்வாறு யாரும் செய்தா லும் அது
எடுபடாத நிலையை ஏற்படுத்த வேண்டும். தீமை பரவுவதற்கு நாமே காரணமாக ஆகக் கூடாது.
قال الله
تعالي : إِنَّ
الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آَمَنُوا لَهُمْ عَذَابٌ
أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآَخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ
24:19
அதிகமான நபர்கள் இக்காட்சியை பார்த்தால் வர்த்தக ரீதியில் வெளியிட்டவன் இலாபமடைவான்.இதற்காகவே இவ்வாறு அற்பர்கள் வெளியிடுகின்றனர் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
ஆர்ப்பாட்டம்
தீர்வா?
ஆதலால் ஆர்ப்பாட்டம் நடத்துவது இலகுவான, அதிக உழைப்பு இல்லாத, அறிவுக்கு வேலையி்ல்லாத, ஒரு நாளில் முடிந்து விடக்கூடிய எதிர்ப்பாகும். அது மட்டுமல்ல. இது ‘முஸ்லிம்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள்’ என்ற இமேஜையும் ஏற்படுத்தும். இதில் வன்முறை வெடித்தால் இதை பயன்படுத்தி இஸ்லாமிய விரோதிகள் தங்களின் காரியத்தை சாதித்துக் கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம்
No comments:
Post a Comment