Pages

Thursday, September 20, 2012

"Islamic Dawah is the best option to prevent the recurrence of dirty American film": Ameer-e-Jamaat


Amir Jamaat-e-Islami Hind, Maulana Syed Jalaluddin Umari has severely condemned the American film blaspheming the Prophet of Islam, Muhammad (peace and blessings of Allah be to him). Terming the release of this film as an act of hurting the Muslims of the world, he expressed grave concern over the fact that America fails in making concerted efforts to contain such anti-Islam activities in spite of expressing displeasure over them. 

The Jamaat chief expressed his confidence that conspiracies to tarnish the image of Islam and denigrate the personage of Muhammad (peace and blessings of Allah be to him) have failed earlier also. And even now no country or group, despite investing talents and resources, can harm the truth of Islam and the majesty of the Prophet who is the Mercy to mankind. Therefore, people should keep from destructive activities aimed at spoiling world peace and try to understand the Message of Peace and Salvation Islam gives and the position of Muhammad (peace and blessings of Allah be to him) as Mercy to all the worlds. 

Declaring the protests, being staged in Muslim countries against the heart-rendering American film, as Muslim masses’ love for and close affinity with their faith and the Messenger of God, the Jamaat leader said the Muslims should prove themselves as Khair-e-Ummat (the best nation) and Ummat-e-Wast (the moderate nation) in every action and every measure they take, and keep from every approach that can bring a bad name to the position and greatness of the community. It would not be right that the crime is committed by one and you punish someone else; it tarnishes the image of Islam.

The Jamaat Ameer appealed to the Islamic Movements and organisations world over to realise the Dawah responsibilities much more so that the common masses might be acquainted with the teachings of Islam, and the ignorance and misapprehensions of the world about Islam, its way of life and the Holy Messenger be allayed and the incidents like the release of the American film might not be repeated in future.

அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையாய் வந்த இறைத்தூதரின் கண்ணியத்துக்கு ஊறு விளைவிக்கின்ற வகையில் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி கடுமையாகக் கண்டனம் செய்துள்ளார். உலகம் முழுவதும் இருக்கின்ற முஸ்லிம்களின் உள்ளங்களைக் காயப்படுத்துகின்ற செயல் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாத்துக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியும் ஆட்சேபமும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்ட பிறகும் இது போன்ற அடாத செயல்களைத் தடுத்து நிறுத்துவதில் அமெரிக்க அரசாங்கம் தோல்வி அடைந்திருப்பது குறித்து அவர் பெரிதும் வேதனைப்பட்டார்.

இஸ்லாத்தின் மாண்பையும் அண்ணல் நபிகளாரின் மகத்துவத்தையும் கொச்சைப்படுத்து-கின்ற சூழ்ச்சிகள் இதற்கு முன்பும் தோல்வியையே தழுவி இருக்கின்றன. இப்போதும்கூட எந்தவொரு நாட்டாலும் அல்லது சமூகக் குழுவினாலும் - அவர்கள் தங்களுடைய ஆற்றல்களையும் வசதிவாய்ப்புகளையும் வளங்களையும் முழுமையாகப் பயன்படுத்தினாலும் - இஸ்லாம்தான் சத்தியமானது என்கிற உண்மைநிலையையும் அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையாய் வந்த அண்ணல் நபிகளாரின் மகத்துவத்தையும் இம்மியளவுகூட ஊறு விளைவிப்பதில் வெற்றி அடையவே இயலாது.  எனவே உலக அமைதியைப் பாதிக்கக்கூடிய நடவடிக்கைகளிலிருந்து முற்றாக விலகி இருந்தவாறு அமைதி, ஈடேற்றத்திற்கான இஸ்லாத்தின் செய்தியையும் அண்ணல் நபிகளார்(ஸல்) அகில உலகங்களுக்கெல்லாம் அருட்கொடையாய் இருக்கின்ற சிறப்பையும் புரிந்துகொள்வதற்கு முயல வேண்டும்.

உள்ளங்களைக் காயப்படுத்துகின்ற அமெரிக்க திரைப்படத்திற்கு முஸ்லிம் உலக நாடு-களில் நடத்தப்பட்டு வருகின்ற ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தங்களுடைய மார்க்கத்தின் மீதும் அண்ணல் நபிகளார்(ஸல்) மீதும் அவர்களுக்கு இருக்கின்ற அளவிலா அன்பையும் இணையிலா பற்றையும் வெளிப்படுத்துகிறன என்றும் அவர் தெரிவித்தார். அதே சமயம் கைரே உம்மத் - சிறந்த சமூகம் என்றும் உம்மத்தே வஸ்த் - நடுநிலை மிக்க சமூகம் என்றும் இறைவனால் அறிவிக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயம் அந்தத் தகுதிநிலைக்கு இயைந்தவையாகவும் அதற்கு சான்று அளிப்பவையாகவும் தம்முடைய அனைத்து செயல்-பாடுகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சமுதாயத்தின் தகுதிக்கும் அந்தஸ்துக்கும் மகத்துவத்திற்கும்  சற்றும் பொருந்தாத யாதொரு வழிமுறையிலிருந்தும் முற்றாக விலகி இருத்தல் வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். குற்றத்தை ஒருவர் செய்திருக்க, இன்னொருவரைத் தண்டிப்பது சற்றும் பொருத்தமற்றதல்ல. இது போன்ற செயல்களால் இஸ்லாம் பற்றிய சித்திரம் சிதைக்கப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இஸ்லாமிய அழைப்புப் பணி தொடர்பான தம்முடைய பொறுப்புகளை உணர்ந்துகொண்டு, அவற்றை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துமாறும், பொதுமக்களுக்கு இஸ்லாத்தின் உண்மையான செய்தியும் போதனைகளும் சென்றடையவும், இஸ்லாத்தைக் குறித்தும் இஸ்லாம் எடுத்துரைக்கின்ற வாழ்க்கைத் திட்டத்தைக் குறித்தும் அண்ணல் நபிகளாரைக் குறித்தும் உலக மக்கள் மத்தியில் காணப்படுகின்ற அறியாமை அகல்வதற்கும் தவறான கருத்துக்கள் களையப்படுவதற்கும் உறுதி செய்யுமாறும் ஜமாஅத்தின் அகில இந்தியத் தலைவர் உலக இஸ்லாமிய இயக்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார். இஸ்லாத்திற்கு எதிரான அமெரிக்கத் திரைப்படம் போன்ற சூழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் தலைதூக்குவதைத் தடுப்பதற்கு இதுதான் சிறந்த வழி என்றும் ஜமாஅத் தலைவர் அறிவித்தார்.
Here

No comments:

Translate

Related Posts Plugin for WordPress, Blogger...