Pages

Friday, September 14, 2012

Jamaat chief condemns the dirty film on the Prophet of Islam


Jamaat chief urges the Indian Government to block the URL of the dirty picture denigrating the Prophet of Islam

Jamaat-e-Islami Hind Tamil Nadu chief A Shabbir Ahmed has strongly condemned the heinous, most outrageous and abominable video film denigrating the last Prophet of Islam. He expressed his agony and anguish over the sinister motives of the film maker. Inspite of the fact that the Prophet of Islam is revered and respected by billions of Muslims worldwide, the film maker has ventured to make such an ugly film on him. This betrays his evil intentions, he said. He urged the US government to take action against the film maker and all those involved in the dirty film and put all of them behind the bars.

The Jamaat leader appealed to the Indian government
to block the dirty picture from the internet, before it spreads like wild fire and inflames passions. This would go a long way to maintain communal harmony, he said. He further demanded a complete ban of the dirty film. He has appealed all the peace loving, like minded and noble hearted souls to join together to curb this menace. He appealed them to urge the Indian Government to take effective steps in this regard.

The Jamaat leader lauded the Muslim community world wide for their more mature, peaceful protests against the dirty film. There may have been some stray incidents of violence in Libya and some other places, but, the protests have by and large been entirely peaceful. He urged the Muslim community to maintain the trend and express their distress and pain to the American community in a peaceful and disciplined manner. He also underlined the importance of conveying the true message of the Prophet of Islam to the world community.

இறைத்தூதரைக் இழிவுபடுத்தி அமெரிக்காவில் எடுக்கப்பட்டிருக்கின்ற கேவலமான வெறுக்கத்தக்க, அருவருப்பான திரைப்படத்தை தமிழக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் ஏ. ஷப்பீர் அஹ்மத் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
 ஏ. ஷப்பீர் அஹ்மத் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கை பின்வருமாறு:  
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான முஸ்லிம்களால் உயிரினும் மேலாய் மதிக்கப்படுகின்ற ஒப்பற்ற தலைவர்தாம் அண்ணல் நபிகளார்(ஸல்) என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இது தெரிந்த நிலையிலும் அமெரிக்க படத் தயாரிப்-பாளர் அண்ணல் நபிகளாரை இழிவுபடுத்துகின்ற விதத்தில் கேடுகெட்ட படத்தைத் தயாரித்திருக்கின்றார். இது அவருடைய தீய நோக்கத்தை வெளிப்படுத்துகின்றது என்றும் ஷப்பீர் அஹ்மத் தெரிவித்தார்.
இந்த கேடுகெட்ட படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் மீதும் அவருக்குத் துணை நின்ற பிறர் மீதும் அவருக்குப் பின்புலத்தில் இயங்குகின்றவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும் படியும் படத்தயாரிப்பில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்கும்படியும் அவர் அமெரிக்க அரசாங்கத்தைக் கேட்டுக்-கொண்டார்.
இந்தக் கேடுகெட்ட படம் இணையத்தின் ஊடே காட்டுத் தீ போல் பரவி மக்களின் உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்து-வதற்குள்ளாக இதனை வெளியிட்டுள்ள இணையத்தளங்கள் அனைத்தையும் முடக்கிவிடுமாறு ஜமாஅத் தலைவர் இந்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டில் சமூக நல்லிணக்கம் செழித்தோங்குவதற்கு அரசின் இந்த நடவடிக்கை பெரிதும் துணை நிற்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல் இந்தக் கேடுகெட்ட படத்தை முற்றாக, முழுவதுமாகத் தடை செய்யும்படியும் அவர் இந்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விஷயத்தில் தக்க நடவடிக்கை எடுக்கும்படி ஒன்றுபட்டு ஒருமித்த குரலில் விண்ணப்பிக்குமாறு அவர் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களையும் சமூக ஆர்வலர்களையும் அமைதியை விரும்புகின்ற நல்லுள்ளங்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தக் கேடுகெட்ட படத்திற்கு எதிராக அமைதியான முறையில் உலகம் முழுவதும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்ற உலக முஸ்லிம்களை அவர் பாராட்டினார். லிபியா உள்ளிட்ட சில இடங்களில் நடந்த சிற்சில வன் நிகழ்வுகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் உலகம் முழுவதும் அமைதியான முறையில்தான் ஆர்ப்பாட்டங்களும் கண்டன ஊர்வலங்களும் நடந்துள்ளன. அமைதியான முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்கின்ற தங்களின் இந்த வழிமுறை-யைத் தொடருமாறு அவர் முஸ்லிம்களைக் கேட்டுக்கொண்டார். அதே சமயம் அண்ணல் நபிகளாரின் ஆளுமையை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
More. Here

No comments:

Translate

Related Posts Plugin for WordPress, Blogger...