Ameer-e-Jamaat Moulana Syed Jalaluddin Umari speaks about the recommendations submitted to JS Verma committee. Here
Showing posts with label Moulana Syed Jalaluddin Umari. Show all posts
Showing posts with label Moulana Syed Jalaluddin Umari. Show all posts
Thursday, January 10, 2013
Abolish Co-education says Jamaat Chief
Monday, March 26, 2012
Wednesday, December 28, 2011
Markazi Majlis-e-Shura in my Naani ghar..!
It was a fascinating spectacle.
The Markazi Majlis-e-Shura of Jamaat-e-Islami Hind was about to begin in my grand mother's house. The atmosphere was that of bonhomie. You could find sherwani clad Moulanas everywhere. Where on earth you could find such a comraderie and mutual affection.
I was very much elated. I found myself running here and there. I was very much amused and excited. In my grandpa's room elderly Moulanas were staying. H Abdur Raqeeb Sahib's voice could be heard. I could not comprehend what is being said. Raqeeb Sahib was sitting in a chair and some Moulana was reclining in a bed. They were talking amicably.
Suddenly I found myself in the hall. It is the same hall where I used to play as a child. Grand pa used to listen BBC in his radio sitting in a easy chair in that very hall. They had converted it into a meeting hall.
Instantly I found myself moving towards the backyard. There people are taking their breakfast silently. Ameer-e-Halqa A Shabbir Ahmed was eating french toast. Somebody was placing a slice of a colourful fruit in someone's plate.
Then again I found myself in the passage between the hall and the backyard. At that instant Ameer-e-Jamaat in a bright blueish black Sherwani entered. He was moving confidantly like a bridegroom with a vibrant smile lit in his face. His steps are measured. He was flanked by two Moulanas. I could not recall their faces.
The hall is nearly full. Ameer-e-Jamaat and others were sitting in a row.
Suddenly I hear a feeble voice of my wife calling Rafia, my fourth daughter (who is doing her UKG). I look for Rafia. She was coming towards me. I move towards her to fetch her.
Just then the voice of my wife had gone shriller.
RAFIAAA..! SCHOOL JANE KA IRADHA HAI YA NAHIN..!
I woke up instantly.
Oh! It was a dream!
What a dream it was!
Sunday, November 20, 2011
Sheila Dikshit inaugurates Al Shifa Hospital
![]() |
Alshifa Multi Speciality Hospital has been inaugurated by Delhi Cheif Minister Sheila Dikshit today at Jamia Nagar, Okhla, New Delhi.
In her inaugural speech, she appreciated the efforts of Human Welfare Foundation, the umbrella body of Vision 2016 program in general and the hospital project in specific which puts forward the concept of quality and affordable health care for all.
She said the project is a land mark initiative fort the people of Okhla. She expressed her long desire for establishing a maternity hospital in Jamia Nagar which was not executed due to non availability of land but will establish once land is availed or will support Human Welfare Foundation to start one. She also said that the government can join hands with HWF for efforts in capacity building and human resource development.
| Moulana Syed Jalaluddin Umri delivering the presidential address |
The inaugural function was presided by Syed Jalaluddin Umri, President of Jamaat-e-Islami Hind (JIH) and Chairman of Human Welfare Trust. He said “Providing service for the helpless and needy people is part of Ibadah (worship) in Islam,”. Making his point home, the JIH Ameer, who is also the Chairman of Human Welfare Trust, said, “Serving the society is as much important as saying one’s own prayers; that’s why the Qur’ān has mentioned Zakat repeatedly only after Salat (Namaaz).”
Prof. K. A. Siddique Hassan, Secretary General of Human Welfare Foundation said that the hospital will be a helping hand for the needy. It will solve the problem of non-availability of quality and affordable health care in the area. The hospital will be an ideal model of health care, in a place where health care is a means of exploitation and an opportunity for huge profits. He explained the activities of vision 2016 program.A report in JIH website. Here
Sandeep Dikshit (Member of Parliament) Safdar H. Khan (Chairman, Delhi Minority Commission), Kiran Walia (Minister of Social Welfare, Delhi), Dr. Azad Moopan, (Chairman, DM Healthcare) Mr. Sandeep Dikshit (Member of Parliament) Dr. Hussain (Chairman, Fathima Healthcare Services) and Syed Hamid Hussain (Chairman, Human Welfare Foundation and Chancellor, Jamia Hamdard Univesity) spoke in the function. Engineer Saleem (Secretary, Human Welfare trust) convened the program and Brigadior Zafar Ali (Operations director, Al Shifa Hospital) delivered the vote of thanks.
Al Shifa hospital has specialised departments for General medicine, general surgery, orthopaedics, gynaecology, paediatrics and physiotherapy. It has a bed capacity of 36 and will be upgraded to 150 shortly. The hospital will soon have two more specialised departments – eye and dental. Medical laboratory, radiology, ultra sound scanning, spirometry and ECG are available in the hospital.
Friday, October 07, 2011
Ameer-e-Jamaat Bereaved
Moulana Syed Jalaludeen Umari, Ameer-e-Jamaat has lost his sister. She passed away yesterday(6th October, 2011) night in Chennai at her son's residence. (Inna lillahi wa inna ilaihi rajeewoon..,.) She had been ill for some time. On hearing this news Ameer-e-Jamaat rushed to Chennai.
Today she was buried in Rahmania Masjid burial ground. Ameer-e-Jamaat led the janaza prayer.
May Allah forgive her and grant maqfirath and Jannah. Ameer-e-Jamaat would be in Chennai for two days.
Sunday, September 25, 2011
My pen has not retired: Moulana Kausar Yazdani
What change you find in the Jamaat’s work?Moulana Kausar Yazdani in conversation with Dr Waquar Anwar in Radiance weekly. Here
There was a time, say up to first forty years of the Jamaat’s formation that everyone was very sincere without any concern about personal amenities. Now the situation has changed. Even full time workers’ officialdom and personal concerns have increased at the cost of sincerity. Now it has a become a routine job beginning at, say, 9 A.M. and continuing up to, say, 5 P.M. Earlier the atmosphere was of total devotion to the object of the Jamaat. There are exceptions, no doubt, but my feeling is based on overall atmosphere.
What are your engagements these days?
After retirement from the Jamaat I have kept myself busy in translation work into the Hindi language. I have translated Bukhari in three volumes. A publisher provides me books for translation and I do the job. My pen has not retired.
A towering personality among Muslims
Javed Ali in Milli Gazette. Here
Moulana Kausar Yazdani was not just a journalist or writer, but an active worker and a leader also. He became chief of J. I. H. (Delhi & Haryana State) in 1979 and remained so till 1995. At that time, he used to start his day before morning prayers (salat Fajr), read daily news paper and wrote editorial, etc. Later, he worked for the Kanti till about 1’o clock. After 3 or 5’o clock in the afternoon, to 11 in the night, he spent his time, visiting different places of Delhi & Haryana for Dawah and Islamic awekening. It was his daily routine. In 1995 he was called to central office of the Jamaat as its all India secretary to look after the Dawah work from which he just retired. Nadvi translated about 40 books in Hindi and wrote a dozen books.
Moulana Kausar Yazdani was laid to rest in New Delhi
A report in Radiance Weekly. Here
Maulana Dr. Kausar Yazdani, a renowned Islamic scholar, author, journalist, activist and former Secretary for Dawah, Jamaat-e-Islami Hind (JIH), breathed his last on August 29 at his residence in New Delhi following a brief illness. He was 76.
His funeral prayer was led by Amir JIH Maulana Syed Jalaluddin Omari after Zuhr prayers on August 30. He was laid to rest in Batla House Graveyard. He left behind three sons and one daughter.
Tuesday, June 14, 2011
வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அரசியல் கட்சி அன்று: அமீரே ஜமாஅத் பேட்டி - மூன்றாம் பாகம்
m தேர்தல் அரசியலில் பங்கேற்பது பற்றிய விவகாரத்தில் ஜமாஅத்துக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் தேர்தல் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாகவும் இது நம்முடைய கோட்பாட்டுக்கும் சிந்தனைக்கும் நேர்மாறானது என்றும் இப்போதையச் சூழலில் தேர்தல் அரசியலில் பங்கேற்பது என்றும் மற்றவர்கள் எதிர்ப்பதாகவும் விஷயம் தெரிந்தவர்கள் மத்தியில் ஒரு கருத்து காணப்படுகின்றது. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ?
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: தற்போது உள்ள ஸிஸ்டம் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டது, அசத்தியமானது என்பதிலும் இந்த ஸிஸ்டத்தை மாற்றுவதற்காக ஜமாஅத் பாடுபட வேண்டும் என்பதில் எந்தவிதமான கருத்துவேறுபாடும் இல்லை.
ஆனால் இப்போது நம்முடைய விவாதத்தில் இருக்கின்ற விவகாரம் இந்திய முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகளுடன் தொடர்புடையதாகும். அவர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் இந்தப் பிரச்னைகள் இன்னும் அதிகமாகக் கூர்மையடைந்துவிட்டுள்ளன.
தேர்தல் அரசியலில் பங்கேற்பது மூலமாக முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க முடியுமா என்பதுதான் இங்கு எழுகின்ற கேள்வி.
இதற்குத் தீர்வுகாண்பதில் இருவேறு கருத்துகள் காணப்படுகின்றன என்பது உண்மையே. அதனைத்தான் நீங்களும் சுட்டிக்காட்டியிருக்கின்றீர்
அண்மையில் நடந்த ஜமாஅத்தின் மத்திய பிரதிநிதிகள் சபை கூட்டத்தில் பேசியபோது ‘நம் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் செக்குலரிஸம், சோஷலிஸம், டெமாக்ரஸி ஆகிய சொற்கள் ஒரு தனிப் பொருளில்தான் ஆளப்பட்டிருக்கின்றன. சோஷலிஸம் குறித்து நாட்டின் உச்ச நீதிமன்றம் ‘சோஷலிஸம் என்கிற சொல் தொடக்கக்காலத்தில் எந்தப் பொருளில் ஆளப்பட்டதோ அந்தப் பொருளில் நாம் அதனை ஆள்வதில்லை. அதற்கு மாறாக சமூக நீதி என்கிற பொருளில்தான் தற்போது ஆளப்படுகின்றது’ எனக் கருத்து தெரிவித்துள்ளது.
![]() |
| மௌலானா அபுல் லைஸ் இஸ்லாஹி நத்வி |
செக்குலரிஸத்தைப் பொருத்தவரை ரொம்பக் காலத்திற்கு முன்பே அப்போதைய அகில இந்தியத் தலைவர் மௌலானா அபுல் லைஸ் இஸ்லாஹி நத்வி மிகத் தெளிவாக எடுத்துரைத்துவிட்டார். அந்தக் காலத்தில் டாக்டர் சையத் மஹ்மூத் ‘செக்குலரிஸம் குறித்து உங்களுடைய கருத்து என்ன?’ என வினவிய போது மௌலானா அபுல் லைஸ் இஸ்லாஹி நத்வி அவர்கள் ‘செக்குலரிஸம் என்பதற்கு இந்த நாட்டில் எந்தவொரு மதத்தின் ஆட்சியும் இருக்காது; அனைத்து மதத்தினரும் சமமாக நடத்தப்படுவார்கள்; அனைவருக்கும் தத்தமது மதத்தின் அடிப்படையில் செயல்படுவதற்கு முழுமையான சுதந்திரம் உண்டு’ என்பதுதான் பொருள் எனில் நாங்கள் அந்த செக்குலரிஸத்திற்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் செக்குலரிஸம் என்பதற்கு இறைவனின் ஆட்சியையும் இறையாண்மையையும் இறைவனின் அதிகாரத்தையும் மறுப்பதுதான் பொருள் எனில் நாங்கள் அதனை எதிர்ப்போம்’ என்று நறுக்குத்தெறித்தாற்போல் பதிலளித்தார். பிற்பாடு மத்திய ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டு மௌலானாவின் விளக்கம் உறுதி செய்யப்பட்டது.
ஜனநாயகம் தொடர்பாகவும் இதே நிலைப்பாடுதான். நான் இதனைக் குறித்து எத்தனையோ தடவை எழுதியிருக்கின்றேன். இறைவனின் அதிகாரத்திற்குப் பதிலாக மனிதர்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதுதான் ஜனநாயகம். இதனை நாங்கள் தவறான சிந்தனை என்றே சொல்கின்றோம். ஆனால் ஜனநாயகத்திற்கு இருக்கின்ற சிறப்பு என்னவெனில் அது கருத்து சுதந்திரத்தையும் விருப்பம் போல் செயல்படுகின்ற சுதந்திரத்தையும் வழங்குவதுதான். இந்தச் சுதந்திரமான சூழல் அழைப்புப் பணிக்கும் பரப்புரை செய்வதற்கும் சமூக சீர்திருத்தப் பணிகளுக்கும் களம் அமைத்துத் தருகின்றது. இதனால் தான் இத்தகைய சுதந்திரத்தையும் உரிமைகளையும் மறுக்கின்ற, ஒரு குறிப்பிட்ட பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் நாட்டு மக்கள் அனைவர் மீதும் திணிக்க நாடுகின்ற மற்ற ஸிஸ்டங்களோடு ஒப்பிடும்போது ஜனநாயகத்தின் அடிப்படையிலான சிஸ்டத்தை நாங்கள் விரும்புகின்றோம்.
நமது நாட்டில் ஜனநாயகம் நிலைபெற்றுள்ளது. இதிலிருந்து பயனீட்டுவதற்கு நாம் முயல வேண்டும். இஸ்லாத்தை நல்ல முறையில் அறிமுகம் செய்வதற்கும் முயல வேண்டும். இஸ்லாத்தைக் குறித்து இங்குக் காணப்படுகின்ற தவறான கருத்துகள், எண்ணங்களைக் களைவதற்கும் முயல வேண்டும். இஸ்லாத்தை மேற்கொள்வதில் நாட்டின் வெற்றியும் உலகத்தின் நன்மையும் அடங்கியிருக்கின்றது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். எந்தவொரு மதமோ அல்லது மார்க்கமோ அரசாங்க மதமாக அறிவிக்கப்படுவதற்கு ஜனநாயகம் தடையாக இருக்கும் என்றும் சிலர் சொல்கின்றார்கள். ஜனநாயக வழியில் செயல்பட்டு இந்தத் தடையை அகற்றுவதற்கான பொருத்தமான வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன்.
Parvaz Rahmani, Editor, Dawat interviews Moulana Syed Jalaludeen Umari, Ameer-e-Jamaat. Translated by T Azeez Luthfullah. More Here
அமீரே ஜமாஅத் பேட்டி - இரண்டாம் பாகம்
m உலகளாவிய அளவில் விவாதிக்கப்படுகின்ற, கருத்துப் பரிமாற்றம் செய்யப்படுகின்ற விவாதப் பொருளாக இஸ்லாத்தை ஆக்க வேண்டும்; இவ்வாறாக உலக அளவில் முடுக்கிவிடப்பட்டுள்ள இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரப் புயலிலிருந்து வெளி வருகின்ற பாதை புலப்பட்டுவிடும் என்றும் நீங்கள் சொல்லி வந்துள்ளீர்கள். இப்போது மேற்கத்தியர்களும் எந்தவிதமான பக்கச்சார்பும் இல்லாமல் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இஸ்லாத்தை ஆராய்வதற்கு முன் வந்துள்ளார்கள் என இப்போது தோன்றுகின்றது. இது தொடர்பாக அண்மையில் வெளியான ‘ஏ வர்ல்ட் வித் அவுட் இஸ்லாம்’ என்கிற நூலைச் சொல்லலாம். அமெரிக் உளவு நிறுவனமான ஸி.ஐ.ஏ.வில் பல்லாண்டுகள் பணியாற்றிய மூத்த உளவுத்துறை அதிகாரி கிரஹாம் ஃபுல்லர் என்பவர் இந்த நூலை எழுதியிருக்கின்றார். மேற்கிலும் கிழக்கிலும் இந்த நூல் பரவலாகப் பேசப்படுகின்றது. இஸ்லாத்தைக் குறித்து மேற்கத்திய உலகம் கொண்டுள்ள நிலைப்பாட்டை பக்கச்சார்புள்ளது; துவேஷமும் காழ்ப்பு உணர்வும் கொண்டது என்று கிரஹாம் ஃபுல்லர் கடுமையாக விமர்சித்து ஒதுக்கியிருக்கின்றார். இஸ்லாத்தை அதன் மூல நூல்களிலிருந்து கற்றுக்கொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் முன் வர வேண்டும். இதுதான் காலத்தின் கட்டாயம் என்றெல்லாம் அவர் எழுதியிருக்கின்றார். இதனை வரவேற்கத்தக்க மாற்றம் என்று சொல்லலாமா?
இஸ்லாத்தின் அடிப்படைக்கோட்பாடுகளில் பொதிந்துள்ள விவேகங்கள் ஏராளம். ஏராளம். இன்னும் அதிகமான விவேகங்களையும் தேடியடைய முடியும். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. திருக்குர்ஆன்தான் இறுதி வேதம் என்பதையும் ஃபைனல் அத்தாரிட்டி என்பதையும் ஒருவர் ஏற்றுக்கொள்வாரேயானால் அது முன்வைக்கின்ற எந்தவொரு போதனை குறித்தும் அவர் ஆட்சேபிக்க மாட்டார். ஆனால் இப்போது எழுதப்படுகின்ற புத்தகங்களில் இந்தக் கோணத்தில் எதுவுமே விவாதிக்கப்படுவதில்லை. இந்தக் கோணத்தில் இந்தப் பாணியில் இஸ்லாம் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுஜீவிகள் குர்ஆனின் அடிப்படைக்கோட்பாடுகளை ஆய்வு செய்யவேண்டும் என்றும்தான் நாம் விரும்புகின்றோம்.
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: இஸ்லாத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அவதூறு பிரச்சாரத்தின் விளைவாக மக்கள் மத்தியில் இஸ்லாத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்கிற தாகத்தை உண்டுபண்ணியிருக்கின்றது என்பதில் ஐயம் இல்லை. இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதற்கு நல்லதொரு வாய்ப்பை அது உருவாக்கியிருக்கின்றது என்பதும் சரியே.
கிரஹாம் ஃபுல்லர் எழுதிய புத்தகத்தையும் நாம் இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும். என்னால் அந்த நூலை முழுமையாக வாசிக்க இயலவில்லை. என்றாலும் அந்த நூல் பற்றிய விமர்சனங்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். கிரஹாம் ஃபுல்லரின் துணிவைப் பாராட்டத்தான் வேண்டும்.
இங்கு ஒரு விஷயத்தை நாம் மறந்துவிடக்கூடாது. மேற்கத்திய உலகம் இஸ்லாத்தைப் போட்டியிடுகின்ற சக்தியாகத்தான் காலங்காலமாகப் பார்த்து வந்துள்ளது. அந்த அடிப்படையில்தான் அது இஸ்லாத்தை கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாக்கி வருகின்றது. நிலைமைகளுக்கேற்ப இந்த விமர்சனங்களின் பாணியும் இலக்கும் மாறும். அவர்கள் சில சமயம் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே குறிவைத்து விமர்சிப்பார்கள். சில சமயம் அண்ணல் நபிகளாரின் அழகிய வாழ்வை விமர்சிப்பார்கள். சில சமயம் வஹீ, தூதுத்துவ ஏற்பாட்டை விமர்சிப்பார்கள். சில சமயம் இஸ்லாத்தின் குடும்ப அமைப்பை விமர்சிப்பார்கள். சில சமயம் இஸ்லாத்தின் பொருளாதார அமைப்பை விமர்சனத்திற்கு உள்ளாக்குவார்கள். இந்த விமர்சனங்கள் அனைத்தும் அடிப்படையற்றவை என்பது ஒரு புறம் இருக்க கேலி, கிண்டல்களாகவும் இவை ஆக்கப்படுவதுண்டு.
இந்த நிலையில் 9/11க்குப் பிறகு இஸ்லாத்தை பயங்கரவாதத்தின் ஊற்றாகச் சித்திரிப்பதற்கு திட்டமிட்ட முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இஸ்லாமிய இயக்கங்களைக் குறி வைத்து விமர்சனங்கள் தொடுக்கப்பட்டன. இன்னும் ஒரு படி மேலே போய் பயங்கரவாதம், வன்முறை, சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றைத் தூக்கி வைத்துக்கொண்டாடுவதுதான் இஸ்லாம்; இந்த இயக்கங்களும் அதிலிருந்துதான் வழிகாட்டுதலையும் ஊக்கத்தையும் பெறுகின்றன என்றெல்லாம் சகட்டுமேனிக்கு அவதூறுகள் பரப்பப்பட்டன.
![]() |
| கிரஹாம் ஃபுல்லர் |
ஆனால் எந்தவித பக்கச்சார்பும் இல்லாமல், இஸ்லாத்தைப் பற்றியோ முஸ்லிம்களைக் குறித்தோ எத்தகைய காழ்ப்புணர்வும் இல்லாமல், எந்தவித முன்முடிவும் இல்லாமல், திறந்த மனத்துடன் இஸ்லாத்தை ஆழ்ந்து படிக்கின்ற எவரும் இஸ்லாத்திற்கு எதிரான இந்தப் பரப்புரைகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை; அடிப்படையற்றவை என்கிற முடிவுக்கே வருவார். கிரஹாம் ஃபுல்லரும் அவருடைய நூலும் இதனைத்தான் பிரதிபலிக்கின்றன.
என்னைக்கேட்டால் எந்தவொரு விவகாரத்திலும் இஸ்லாத்தின் பார்வையைப் புரிந்துகொள்வதற்காக முயல்வாரேயானால் அவர் நிச்சயமாக நீதியும் நியாயமும் செறிந்த அதன் போதனைகளில் மனத்தைப் பறிகொடுத்துவிடுவார்; இஸ்லாத்திற்கு எதிராகத் தொடுக்கப்படுகின்ற ஆட்சேபங்களை அடிப்படையற்றவை என ஒதுக்கித்தள்ளிவிடுவார் என்றே சொல்வேன். என்றாலும் இவ்வாறு ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வகையான ஆய்வு இஸ்லாத்தைப் பற்றி ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகவோ, இஸ்லாத்தின் ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தை மட்டும் கவனத்தில் கொள்ளப்பட்ட ஆய்வாகவோ அமைந்துவிடுகின்றன. இதுதான் இவ்வகையான ஆய்வுகளில் பொதிந்து இருக்கின்ற குறை ஆகும்.
இஸ்லாத்தைப் பற்றி ஆய்வு செய்யத்தொடங்கும்போது முதலில் அதன் அடிப்படைகள், அடிப்படைக் கோட்பாடுகள் ஆகியவற்றை ஆழ்ந்து வாசிக்க வேண்டும். பிறகு அதன் ஒளியில் குறிப்பிட்ட பிரச்னையில் அது முன்வைக்கின்ற போதனைகளைப் புரிந்துகொள்வதற்கு முயல வேண்டும். இஸ்லாத்தின் கோட்பாடுகள்தாம் அதன் அடிப்படைகளாக இருக்கின்றன. இஸ்லாம் நாத்திகத்தையும் இணைவைப்பையும் எதிர்க்கின்றது. அவற்றுக்கு எதிராக கலப்படமற்ற, மாசற்ற தூய்மையான ஓரிறைக் கோட்பாட்டை அது முன்வைக்கின்றது. அது இந்த உலக வாழ்வை மனிதனின் இறுதி இலக்காகப் பார்ப்பதில்லை. அதற்குப் பதிலாக மறுமை, நற்கூலி, தண்டனை பற்றியக் கருத்தோட்டத்தை அது முன்வைக்கின்றது. அறிவைத் தேடியடைவதற்காக மனிதனுக்குக் கிடைத்திருக்கின்ற வழிவகைகளை அது போதுமானவையாகக் கருதுவதில்லை. இறைவழிகாட்டுதல் இன்றி மனிதனால் வாழ்க்கைத்திட்டத்தை அமைத்துக்கொள்ள முடியாது என அது அழுத்தம்திருத்தமாக வாதிடுகின்றது. அதற்காக வஹீ, தூதுத்துவம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொள்வது அவசியம் என அது அறிவிக்கின்றது. அண்ணல் நபிகளாரை இறுதித்தூதராகவும் திருக்குர்ஆனை இறுதி வேதமாகவும் அறிமுகப்படுத்துகின்றது. அது மனிதனை இறைவனின் அடியானாக, இறைவனிடம் பதில் அளிக்கக் கடமைப்பட்டவனாக அறிவிக்கின்றது. மனிதர்களிடையே சமத்துவம் கட்டிக்காக்கப்பட வேண்டும்; மனிதநேயம் மலர வேண்டும் என்றே அது எதிர்பார்க்கின்றது. மனிதன் மீது இன்னொரு மனிதனின் ஆதிக்கத்தை தவறு என்று அது ஒதுக்குவது இந்த சமத்துவத்தின் ஒரு பரிமாணம்தான். அதற்குப் பதிலாக இறைவனின் ஆட்சி என்கிற கருத்தோட்டத்தை அது முன்வைக்கின்றது. இஸ்லாத்தின் இந்த அடிப்படைக் கோட்பாடுகளையும் போதனைகளையும்தான் விவாதப் பொருளாக ஆக்க வேண்டும்.
இஸ்லாத்தின் அடிப்படைக்கோட்பாடுகளில் பொதிந்துள்ள விவேகங்கள் ஏராளம். ஏராளம். இன்னும் அதிகமான விவேகங்களையும் தேடியடைய முடியும். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. திருக்குர்ஆன்தான் இறுதி வேதம் என்பதையும் ஃபைனல் அத்தாரிட்டி என்பதையும் ஒருவர் ஏற்றுக்கொள்வாரேயானால் அது முன்வைக்கின்ற எந்தவொரு போதனை குறித்தும் அவர் ஆட்சேபிக்க மாட்டார். ஆனால் இப்போது எழுதப்படுகின்ற புத்தகங்களில் இந்தக் கோணத்தில் எதுவுமே விவாதிக்கப்படுவதில்லை. இந்தக் கோணத்தில் இந்தப் பாணியில் இஸ்லாம் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுஜீவிகள் குர்ஆனின் அடிப்படைக்கோட்பாடுகளை ஆய்வு செய்யவேண்டும் என்றும்தான் நாம் விரும்புகின்றோம்.
தமிழில் : T.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
This is the second part of the interview of Ameer-e-Jamaat Parvaz Rahmani, Editor, Dawat interviews Moulana Syed Jalaludeen Umari, Ameer-e-Jamaat. Translated by T Azeez Luthfullah. More Here
Friday, May 27, 2011
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி பேட்டி!
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தன்னுடைய குறிக்கோளை அடைவதற்கான போராட்டத்தைத் தொடரும்!
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி பேட்டி!
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் அமீரே ஜமாஅத்தாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஏப்ரல் 6 அன்றே தஅவத் இதழுக்காக அவருடன் உரையாட முயன்றேன். ஆனால் மௌலானா ஷஃபி மூனிஸ் சாகிப் இறந்துவிட்டதால் அன்றைய தினம் மௌலானா அவர்களுடன் பேசுவதற்கு வாய்ப்பும் நேரமும் வாய்க்கவில்லை. மத்தியப் பிரதிநிதிகள் சபையின் கடைசி அமர்வையும் தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எப்பாடு பட்டாவது ஏப்ரல் 31 ஆம் தேதியிட்ட தஅவத் இதழில் அமீரே ஜமாஅத் அவர்களின் பேட்டியை வெளியிட வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. ஆனால் மௌலானா அவர்களோ அடுத்தடுத்த தினங்களில் இன்னும் அதிகமாகப் பிஸியாகிவிட்டார். சுற்றுப்பயணங்கள் வேறு! இந்த நிலைமையில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா தொடங்கப்பட்டுவிட அது தொடர்பான கேள்விகளையும் சேர்க்க வேண்டியதாயிற்று. இவ்வாறாக, பல்வேறு பிரச்னைகள், வாய்ப்புகள், சவால்கள் குறித்து மௌலானா அவர்களுடன் பல மணிநேரம் பேசுகின்ற வாய்ப்பு கிடைத்தது.வெவ்வேறு நாட்களில் மூன்று அமர்வுகளில் இந்த உரையாடல்கள் நடந்தன. மௌலானா அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் எல்லாவற்றைக் குறித்தும் விரிவாக விடையளித்தார். பேட்டி நீண்டுவிட்டதால் மௌலானா அவர்களின் அனுமதியுடன் சில கேள்விகளுக்கான விடைகளின் சில பகுதிகளை நீக்கி சுருக்க வேண்டி வந்தது. இவ்வாறாக, பல்வேறு விஷயங்கள் குறித்து ஒருங்கிணைந்த, இரத்தினச் சுருக்கமான, நிறைவான விடைகள் தொகுத்துத் தரப்படுகின்றன. பேட்டியின் தொகுப்பை அமீரே ஜமாஅத் அவர்களும் ஒரு பார்வை பார்த்துக் கொடுத்துள்ளார்.
சற்றே காலதாமதமாக இந்த நேர்காணல் அச்சானாலும் மன நிறைவைத் தரும் என்று எதிர்பார்க்கின்றேன். முஸ்லிம் உம்மத், இஸ்லாமிய இயக்கம், நாட்டுப் பிரச்னைகள், சமுதாயச் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டுள்ள அனைவரும் இதனை வாசித்துப் பயன் பெறுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. நாட்டுநடப்பு, நிகழ்வுகள் பற்றிய மௌலானாவின் தாக்கங்களும், எண்ணங்களும் அவ்வப்போது வழங்கப்படும். இன்ஷா அல்லாஹ்!
- பர்வாஸ் ரஹ்மானி, ஆசிரியர், தஅவத் வாரம் இருமுறை
m ஜமாஅத் உறுப்பினர்கள் மீண்டும் ஒரு முறை உங்களைத் தங்களின் அமீராகத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். மிகப் பெரும் பொறுப்பை உங்கள் மீது சுமத்தியிருக்கின்றார்கள். நீங்கள் எப்படி உணர்கின்றீர்கள்?
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: முதல் தடவையாக என் மீது இந்தப் பொ-றுப்பு சுமத்தப்பட்ட போது இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்குத் தேவையான அறிவாற்றல், இறையச்சம், இறைப்பற்று, ஞானம், மதிநுட்பம், அர்ப்பணிக்கும் பண்பு, இறைவழியில் நிலைத்து நிற்றல் போன்ற அனைத்திலும் மற்றவர்களை விட கடைகோடியில் இருப்பவனாகத் தான் என்னை நானே பார்த்தேன். நான்கு ஆண்டுகள் இந்தப் பொறுப்பைச் சுமந்த பிறகு அந்த உணர்வு இன்னும் கூடியிருக்கின்றது.
உண்மை என்னவெனில், வாழ்க்கைத் திட்டம் பற்றிய புரட்சிகரமான பார்வையைக் கொண்ட, தனிப்பட்ட வாழ்விலும் கூட்டு வாழ்விலும் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த விழைகின்ற, இந்த நோக்கத்திற்காக நாடு முழுவதிலும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்ற ஒரு இயக்கத்துக்குத் தலைமை தாங்குவதும் வழிகாட்டுவதும் சாதாரண வேலை அன்று. ஆனால் ஜமாஅத் இந்த எளியவன் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். கடந்த நான்காண்டுகளில் இயக்கத் தோழர்களும் நண்பர்களும் எனக்கு அளித்த ஆதரவும் ஒத்துழைப்பும் எனக்கு மனநிறைவைத் தருகின்றது; என்னுடைய கவலையைப் போக்குகின்றது. அல்லாஹ்வின் தனிப்பெரும் கிருபைக்கும் அருளுக்கும் அடுத்ததாக இயக்கத் தோழர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அசாதாரணமான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இனி வரும் நாட்களிலும் எனக்கு இந்த ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்றும் இயக்கம் வெற்றிப்பாதையில் மேன்மேலும் முன்னேறிச் செல்லும் என்றும் நம்புகின்றேன். இன்ஷா அல்லாஹ்
m மத்திய தலைமையகச் சூழலைக் குறித்துச் சொல்லுங்களேன். அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியத் தலைமையகத்துடன் இணைந்து இருந்திருக்கின்றீர்கள். பன்னிரு ஆண்டுகள் அகில இந்தித் துணைத் தலைவராக (1991-இலிருந்து) செயல்பட்டிருக்கின்றீர்கள். எனவே மத்தியத் தலைமையகமும் அதன் சூழலும் உங்களைப் பொறுத்த வரை அந்நியமான சூழல் கிடையாது. என்றாலும் நீங்கள் அமீரே ஜமாஅத்தாகச் செயலாற்றிய இந்த நான்கு ஆண்டுகளில் மத்தியத் தலைமையகச் சூழல் குறித்து உங்களுடைய உணர்வுகளைக் கூறுங்களேன்
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: இந்தக் கேள்வி இரண்டு பரிமாணங்களைக் கொண்டது. முதலா-வது மத்தியத் தலைமையகத்தில் இருப்பவர்கள் ஒருவருக்-கொருவர் கொண்டுள்ள உறவு பற்றியது. இந்தக் கோணத்-தில் பார்த்தால் மனம் மகிழ்ச்சியால் நிறைகின்றது. மத்தியத் தலைமையகத்தில் பணியாற்றுகின்ற பொறுப்பாளர்கள், ஊழியர்கள் மத்தியில் அன்பும் இணக்கமும் தூய எண்ணமும் நிறைந்த உறவும் தொடர்பும் நிலைபெற்றுள்ளது. அவர்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் இந்த எளியவனுக்குத் தொடர்ந்து கிடைத்து வந்துள்ளது. தலைமையகத்தில் இருக்கின்ற நாம் அனைவருமே ஒரே டீமாக, குழுவாகச் சேர்ந்து செயலாற்றி வருகின்றோம்.
இரண்டாவது பரிமாணம் இறைத்தொடர்பு, தஸ்கியா ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும். இந்தக் கோணத்தில் பார்த்தால் சில தோழர்கள் மிக மிக பாராட்டத்தக்க அளவில் தங்களை வளர்த்துக் கொண்டுள்ளார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் நம் எல்லோருக்கும் ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாக இருக்கின்றார்கள்.
சில சகோதரர்களிடம் சில பலவீனங்கள் காணப்படுகின்றன. ஆனால் தங்களின் பலவீனங்களை அவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள். இது மகிழ்ச்சியளிக்கும செய்தியாகும். சகோதரர்களுக்கு அவர்களிடம் இருக்கின்ற பலவீனங்கள் குறித்து உணர்த்தும்போது எவருமே முகம் சுளித்ததில்லை; அதிருப்தியடைந்ததில்லை. இனி வருங்காலத்தில் அவர்கள் தங்களின் பலவீனங்களைக் களைந்து கொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருக்கின்றது.
Parvaz Rahmani, Editor, Dawat interviews Moulana Syed Jalaludeen Umari, Ameer-e-Jamaat. Translated by T Azeez Luthfullah. More Here
Saturday, April 09, 2011
மௌலானா முஹம்மத் ஷஃபி மூனிஸ் சாஹிப் மறைவு
முதுபெரும் இஸ்லாமிய இயக்கத் தலைவரும் ஜமாஅத்தே இஸ்லபாமி ஹிந்த் பேரியக்கத்தின் முன்னாள் அகில இந்தியத் துணைத் தலைவருமான மௌலானா முஹம்மத் ஷஃபி மூனிஸ் சாஹிப் 6 ஏப்ரல் 2011 அன்று காலமானார். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
அவருக்கு வயது 94. மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி காலத்தில் இயக்கத்தில் இணைத்துக் கொண்ட மூத்த இயக்கத் தலைவர் அவர். அவருடைய மறைவுடன் ஒரு யுகம் நிறைவு பெற்றுவிட்டது எனலாம். இயக்கத்தின் தொடக்கக்காலத்திலிருந்து அதன் ஏற்றஇறக்கங்களுடனும் வெற்றி தோல்விகளுடனும் பின்னிப் பிணைந்திருந்தவர் மௌலானா ஷஃபி மூனிஸ்.
அவருடைய மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது மிகவும் கடினமே என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி தம்முடைய இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
உத்திரப் பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவர் அவர். தொடக்கத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்திருந்தார். அதிலும் சோஷலிஸ கொள்கைகளைப் பேசி வந்த காங்கிரஸ் குழுவினருடன் தொடர்பு வைத்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு ஒரு ஸலஃபி ஆலிமுடன் பழக்கம் ஏற்பட்டது. இவருடைய அறிவுக்கூர்மையையும் சமுதாயச் சிந்தனையையும் உளத்தூய்மையையும் பார்த்த அந்த ஸலஃபி அறிஞர் இந்த இளைஞரை எப்படியாவது கவர வேண்டும் என்கிற எண்ணத்துடன் நெருங்கிப் பழகினார். ஆனாலும் ஷஃபி மூனிஸ் படிகின்ற மாதிரி தெரியாததால் நூல்களைக் கொடுக்கத் தொடங்கினார். அவ்வாறு அவருக்குக் கொடுக்கப்பட்ட நூல்களில் ஒன்றுதான் ‘இஸ்லாம் அவ்ர் மௌஜுதா ஸியாஸி கஷ்மகஷ் . இஸ்லாமும் தற்போதைய அரசியல் போராட்டமும்’ என்கிற நூல். மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி அவர்கள் எழுதிய நூல் அது. இளைஞர் ஷஃபி மூனிஸின் பார்வையையும் சிந்திக்கும் கோணத்தையும் முற்றாக மாற்றி அமைத்துவிட்டது அந்நூல்.
அந்நூல் படித்து இயக்கப் பாதையில் பயணிக்கத் தொடங்கிய ஷஃபி மூனிஸ் அதற்குப் பிறகு திரும்பிப் பார்க்கவே இல்லை. காஜியாபாத் மாநகர ஜமாஅத் கிளைத்தலைவர், தில்லி மாநகர ஜமாஅத் தலைவர், தில்லி மாநிலத் தலைவர், அந்தக் காலத்து ஹைதராபாத் மாகாணத் தலைவர், மேற்கு உத்திரப்பிரதேச மாநிலத் தலைவர் என அடுத்தடுத்து பல்வேறு பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியப் பொதுச் செயலாளராகவும் அவர் சில காலம் செயலாற்றியிருக்கின்றார். ஜமாஅத்தின் மத்தியப் பிரதிநிதிகள் சபை, மத்திய ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினராக பல்லாண்டுகளாக மீண்டும் மீண்டும் தேர்வாகி வந்துள்ளார். தற்போதைய மத்தியப் பிரதிநிதிகள் சபையிலும் அவர் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
மௌலானாவுக்கு வயது 94. இறுதி மூச்சு வரை இயக்கப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட சத்தியப் போராளிதான் அவர். அவர் ஓர் அறப் போராளியாக, நிர்வாகியாக, இயக்கச் சிந்தனையாளராக, வழிகாட்டியாக தம்முடைய முழு வாழ்வையும் அர்ப்பணித்துவிட்டவர் அவர்.
அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரத், ஃபாரம் ஃபார் டெமாக்ரஸி அண்டு கம்யூனல் அமிட்டி, தி ஸ்காலர் ஸ்கூல் உட்பட ஏராளமான அமைப்புகளின் உருவாக்கத்தில் அவரும் பெரும் பங்கு வகித்திருக்கின்றார். மௌலானா ஷஃபி மூனிஸ் அவர்களின் நேர்காணல்களை அபூர்வமாகத்தான் படித்திருப்பீர்கள். சமரசத்தில் ஃபாரம் தொடர்பாக நேர்காணல் ஒன்று வந்திருக்கின்றது. அவருடைய செயல்பாடுகள் பற்றிய அறிக்கைகளும் அதிகமாக வெளி உலகுக்குத் தெரிவதில்லை. அவருடைய புகைப்படமும் அதிகமாக பதிவாவதில்லை. என்றாலும் மௌன உழைப்பாளியாக இயக்கப் பணிகளில் இரண்டறக் கலந்துவிட்டிருந்தார் அவர். இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்து அதனுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர். ஷஃபி மூனிஸ் என்றால் ஜமாஅத்தே இஸ்லாமி என்கிற அளவுக்கு இயக்கத்தையும் தன்னையும் பின்னிப் பிணைத்துக் கொண்டவர்.
6 ஏப்ரல் அன்று இரவு இஷா தொழுகைக்குப் பிறகு தில்லியில் பட்லா ஹவுஸ் அடக்கத்தலத்தில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்தியப் பிரதிநிதிகள் சபைக் கூட்டம் நடந்துகொண்டிருந்ததால் ஜமாஅத்தின் முக்கியமான மனிதர்கள் அனைவரும் அங்கு திரண்டுவிட்டிருந்தனர். அகில இந்தியத் தலைவர், பொதுச் செயலாளர், அகில இந்தியச் செயலாளர்கள், மத்தியத் தலைமையகப் பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்கள், மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள், ஊழியர்கள் என ஜமாஅத்தின் ஒட்டுமொத்த பட்டாளமே அங்குத் திரண்டுவிட்டிருந்தது. ஆக, மௌலானா ஷஃபி மூனிஸ் எந்த மனிதர்களை தனது அன்புக்குரியவர்களாக மதிப்புக்குரியவர்களாக நேசித்து வந்தாரோ, எவர்களுக்கு தன்னுடைய வாழ்வில் மற்றெல்லாரை விடவும்மிக அதிகமான முக்கியத்துவம் கொடுத்து வந்தாரோ அவர்கள் எல்லாருமே அங்கு குழுமி விட்டிருந்தனர்.
மௌலானாவுக்கு இயக்கம்தான் எல்லாமே. இயக்கம், இயக்கம், இயக்கம் என்று ஓயாமல் ஒழியாமல் பாடுபட்டார் அவர். அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தபோது அந்த இயக்கமே - ஒட்டுமொத்த இயக்கமே- அவரை வழியனுப்பத் திரண்டுவிட்டது. அந்தக் காட்சி நெஞ்சை நெகிழச் செய்வதாக இருந்திருக்க வேண்டும்.
ஸஆதத்துல்லாஹ் ஹுஸைனி எழுதுகின்றார்:
கடந்த ஏப்ரல் 3 முதல் 7 வரை நடந்த மத்தியப் பிரதிநிதிகள் சபை கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். மௌலானா ஷஃபி மூனிஸ் தள்ளாத வயதிலும், உடல் நலம் குன்றிய நிலையிலும் மத்தியப் பிரதிநிதிகள் சபையின் அனைத்துக் கூட்டங்களிலும் கலந்துகொண்டார். பிரதிநிதிகள் சபைக் கூட்டம் நடப்பதற்கு முன்பு ஏப்ரல் 2 அன்று நடந்த மத்திய ஆலோசனைக் குழுவின் கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். அவர் எனக்கு எதிரில்தான் அமர்ந்திருந்தார். புன்னகை ததும்ப அவர் என்னைப் பார்த்துக்கொண்டிருந்த காட்சி இன்றும் என்னுடைய மனத்திரையில் பதிந்திருக்கின்றது.
அவர் எங்களுடம் ஏப்ரல் 5 மாலை வரை இருந்தார். மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கொடுக்கப்பட்ட வாக்குச் சீட்டில் தன்னுடைய வாக்குகளைப் பதிவு செய்து, கையெழுத்திட்டு, பொறுப்பாளர்களிடம் கொடுத்துவிட்டுத்தான் போனார். அவர் போகும் போது நண்பர்கள் பலரையும் சந்தித்து கைகுலுக்கிவிட்டே சென்றார். நானும் அவருடன் கூடவே பேசிக்கொண்டே நடந்து சென்று வழியனுப்பிவிட்டுத்தான் வந்தேன். அடுத்த நாள் அவர் வர மாட்டார் என்று நாங்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
அடுத்த நாள் காலை அமர்வில்தான் அந்தச் செய்தி வந்தது. மௌலானா அவர்கள் இரவு படுத்துக் கொண்டிருந்த நிலையில் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டுவிட்டது என்பதுதான் அந்தச் செய்தி. அன்று மதியமே அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்தது. நாங்கள் எல்லோருமே அவருடைய வீட்டுக்குப் போனோம். அவர் மிகவும் நிம்மதியாகப் படுத்துக் கொண்டிருந்தார். அவருடைய அதரங்களில் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. திடீரென்று கண் திறப்பார் : “ஹதராபாதிலிருந்து ஏதாவது புதிய செய்தி இருக்கின்றதா? ஏதாவது நல்ல செய்தி உண்டா?” என விசாரிப்பாரோ என்றே தோன்றியது.
چوں مرگ آید تبسم بر لب اوست
“ஒரு நம்பிக்கையாளனின் அடையாளத்தைச் சொல்லட்டுமா? மரணம் வரும்போது அவருடைய முகத்தில் புன்னகை இருக்கும்” என்கிற பாரசீக கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
அன்று மாலை அவருடைய உடலை ஜமாஅத் தலைமையகத்திற்குக் கொண்டு வந்துவிட்டார்கள். அன்று இரவு இஷாவுக்குப் பிறகு நடந்த ஜனாஸா தொழுகையிலும் தொடர்ந்து நல்லடக்கத்திலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றார்கள்.
அவர் ஜமாஅத்துக்காகவே வாழ்ந்தார். ஜமாஅத்தின் ஒட்டுமொத்த வரலாற்றுக்கு சாட்சியானார். ஜமாஅத்தின் முக்கியமான அகில இந்திய அமர்வு ஒன்றில் கலந்து கொண்ட நிலையில் அவர் இறந்து போனார்.
Wednesday, April 06, 2011
Moulana Syed Jalaluddin Umari re-elected as Ameer-e-Jamaat
Moulana Syed Jalaluddin Umri has been re-elected as Ameer-e-Jamaat. Allah Hu Akbar. He has been re-elected for the term April 2011 to March 2015.
He is from Puttagaram village near Tirupattur town in Tamil Nadu. He graduated from Jamia Darussalam, Omerabad and straight away joined the Markaz Jamaat in his teen years. He was just 19 years old when he landed in North India coming all the way from southern most part of the country. It seems as though he was destined to serve for the cause of Islam in that way. Then he never turned back. He was fortunate enough to grow in the guidance and shadow of leading lumineries of the Islamic Movement. At those times the Headquarters of the Jamaat was based in Rampur. Moulana made it his first home.
He served the cause of Deen-e-Huq in various capacities. He was Ameer-e-Muqami of Aligarh for ten years. He has been getting elected to the Markazi Majlis-e-Numaindgan and Central Advisory Council for many decades. He has served the mission as Naib Ameer-e-Jamaat since 1990. He edited the official organ of the Jamaat 'Zindgi-e-Nau' for five years. He assumed this onerous task after the demise of Moulana Syed Ahme Urooj Qadiri. Besides he has been editing the research journal 'Tahqeeqat-e-Islami' for the past thirty years.
Moulana Syed Jalaluddin Umari was one of the founder members of All India Muslim Personal Law Board (AIMPLB) and he is attached with various prominent educational institutions too. He is currently serving as Chairman of Idara-e-Tahqeeq-o-Tasneef-e-Islami Aligarh, an unique research institution in this country. Besides he is the Chancellor of Jamiatul Falah, Bilarya Ganj, Azamgarh (U.P.) and Jamiatus Suffa, Warangal (A.P.). More Here.
He is one of the great scholars living amidst us. He is a prolific writer. He has written more than 36 books on various subjects. Many of his books have been translated in various languages. He penned down a voluminous book on M'aruf-o-Munkar and it has been translated in Arabic, English, Turkish, Tamil, Bengali and Hindi. His another work on Islam aur wahdat-e-Bani Adam has been translated in English, Hindi, Telugu, Marathi, Gujarati, Kannada and Tamil.
By Allah's grace I had the privilege of translating some of his books. Islam aur Wahdat-e-Bani Adam and Aurat aur Islam have been published as ஒன்றே குலம் ஒருவனே தேவன் and பெண்களும் இஸ்லாமும் Allah is Great.
Subscribe to:
Posts (Atom)














