Pages

Wednesday, June 08, 2011

SIO delegates greet M H Jawahirullah MLA


மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.M.H.ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களை, இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) மாநில செயலாளர் M.சையது அபுதாஹிர் M.Sc., M.Phil தலைமையில், மாநில மக்கள் தொடர்பு செயலாளர் M.S. சப்பீர் அலி MBA, மாநில ஜூனியர் அபிமானிகள் வட்ட பொறுப்பாளர் S.சேக் இஸ்மாயில் M.Sc ஆகியோரைக் கொண்ட உயர்நிலைக் குழுவினர் சந்தித்து, நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக SIO-ன் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மாணவர் கோரிக்கையையும் வழங்கினர்.
இச்சந்திப்பின் போது, இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) செய்து வரும் மாணவர் நலப்பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்ட்து. மேலும் தமிழகத்தின் கல்வி சூழ்நிலைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கல்வி இன்று வியாபார நோக்கில் செயல்படுவதை தடுக்கவும், தனியார் மயமாக்கப்படுகின்ற கல்வித்துறையின் போக்கினை மாற்றிடவும், பாலியல் கல்வித்திட்ட்த்தை ரத்து செய்திடவும், அனைத்து வகுப்புகளுக்கும் ஒழுக்க பாடத்திட்ட்த்தை கொண்டு வருவதற்கான முழு முயற்சியினை சட்ட மன்றத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் (SIO) -ன் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்ட்து.
இச்சந்திப்பின் போது மாணவர்கள் அறிக்கையை மாநில செயலாளர் சகோ. சையது அபுதாஹிர் அவர்களும், நினைவுப் பரிசினை மாநில மக்கள் தொடர்பு செயலாளர் சகோ.சப்பீர் அலி அவர்களும் பேரா.M.H.ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களுக்கு வழங்கினர். 
A report in SIO Tamil Nadu Zone. Here

1 comment:

Azeez Luthfullah said...

Mr M H Jawahirullah has the distinction of being the first among the Islamists to enter the legilative Assembly in the state. He is unique in the sense that he had his begining in the tahreeki background. He was groomed by Moulana M A Jameel Ahmed in his initial stages. He started weilding pen at his instance and has written many articles in Samarasam. Besides he has translated articles from Frontline in Tamil. He himself has acknowledged this aspect many a times.

It is heartening to note that such a learned, matured, spirited man has been bestowed with the responsibility of being a member of legislative assembly.

I hope and pray that he would justify the chance awarded to him and make a difference.

May Allah bless him.

Translate

Related Posts Plugin for WordPress, Blogger...