Veteran Writer, political commentator, social activist Chinna Kuthoosi @ Thiyagarajan passed away on 22nd May. I have met this legendary writer a couple of times. Once with Marhoom Moulana M A Jameel Ahmed Sahib and many times with our own kavinjar Moosa Kaka.T Azeez Luthfullah. Here
He was very receptive. always to the point. I remember during a discussion I inadvertantly uttered the name Veer Savarkar. He immediately corrected me. "Don't say Veer Savarkar. He is just Savarkar. What has he done to be called Veer Savarkar? He wrote an apology letter to the British to reduce his prison term".
Then once when prominent cartoonist Irfan Hussain of Outlook was murdered by unidentified persons in New Delhi we had published a collection of cartoons of Irfan Hussain with a four line message at the end in Samarasam. Chinna Kuthoosi liked it. He admired the choice of the cartoons. They were all famous cartoons of Irfan Hussain ridiculing the hindutva ways of L K Advani, M M Joshi etc. He liked the subtle suggestion hidden behind the choice of the cartoons and the four line message. When I heard it I was at cloud nine.
சின்னக்குத்தூசி பெரிய படிப்பாளி. நான் சந்தித்த தருணங்களிலெல்லாம் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்த கோலத்திலேயே அவரைப் பார்த்திருக்கிறேன் என்பது நினைவுக்கு வருகிறது. ஒரு முறை கல்கியில் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார் ஒரு தொடர் எழுத ஆரம்பித்தார். [சுவாமிகளின் சொற்பொழிவை ஆசிரியர் சீதா ரவி எழுத்துக்கு மாற்றி, வெளியான தொடர்.] அந்த வாரம் நான் சின்னக்குத்தூசியைப் பார்க்க அவர் அறைக்குச் சென்றபோது, ‘அதான் சங்கராசாரியார் அருள்வாக்கு போடறிங்களே, இதுவேறயா?’ என்றார். நான் பதில் சொல்லாமல் சிரித்தேன். ‘ஆனா நல்லாருக்கு. படிச்ச, விஷயம் தெரிஞ்ச மனிதர். ஒரு பக்திப் பத்திரிகைக்கு சரியா இருக்கும்’ என்று சொன்னார். [அவர் பரம நாத்திகர்.] கல்கியில் முக்கூராரின் தொடர் மிகப் பிரம்மாண்டமான வெற்றி கண்டபோது திரும்பவும் ஒருமுறை அவரைச் சந்தித்தேன். அவரது முந்தைய விமரிசனத்தை நினைவுகூர்ந்து, ‘என்ன சார் பண்றது? சுஜாதா தொடரைவிட இது பெரிய ஹிட்’ என்றேன். ‘இருக்கலாம். ஆனா காலப்போக்குல புது வாசகர்கள், குறிப்பா இளம் வாசகர்கள் பத்திரிகைக்கு வர்றதைத் தடுக்கக்கூடிய விஷயங்கள் இதெல்லாம்’ என்று சொன்னார்.
அவர் சொன்னது உண்மை. 1999வது ஆண்டு நான் கல்கியில் இருந்து வெளியேறிவிட்டேன். அதன்பின் இளைய தலைமுறையைக் கல்கி பக்கம் இழுக்கும் முயற்சிகள் எத்தனையோ விதமாக மேற்கொள்ளப்பட்டும் பெரிய பலன் இருக்கவில்லை.Pa Raghavan. More Here
Obituary in Nakkeeran. Here
சின்னக்குத்தூசி என்ற புனைபெயரில் இவர் பரவலாக அறியப்பட்டாலும் கொக்கிரகுளம் சுல்தான் முகமது, காமராஜ் நகர் ஜான் ஆசிர்வாதம், தெரிந்தார்க்கினியன், ஆர்.ஓ.மஜாட்டோ, திட்டக்குடி அனீஃப் ஆகிய புனைப் பெயரிகளிலும் பல அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.நடமாடும் திராவிட இயக்க களஞ்சியம் எனும்படி தமிழகத்தின் 60 ஆண்டுகால அரசியல் விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் சின்னக்குத்தூசி அவர்கள் இந்திய அரசியல் குறித்தும் ஆழ்ந்த அறிவனுபவம் மிக்கவர். பொதுவாழ்க்கை - எழுத்துப்பணி இவற்றிற்றகாக திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்து வந்த சின்னக்குத்தூசி அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி எண்.13 வல்லப அக்கிரஹாரம் தெருவில் தங்கியிருந்த சிறிய அறை, இன்றைய பத்திரிகையாளர்களின் வேடந்தாங்கலாக அமைந்திருந்தது. மனிதநேயம், பகத்தறிவு, சுயமரியாதை ஆகியவற்றை இலட்சியங்களாகக் கொண்டு திராவிட இயக்க நெறிகளின்படி வாழ்ந்து வந்தவர் திரு.சின்னக்குத்தூசி (எ) இரா.தியாகராஜன் அவர்கள்.
No comments:
Post a Comment