Anna Centenary Library, Chennai |
The move to change the Anna Centenary Library (ACL) into a childcare hospital by Chief Minister J Jayalalitha has evoked anguish and anger among the literary circles of Tamil Nadu.
Anna Centenary Library is a newly established state library of Indian state of Tamil Nadu. It is located at Kotturpuram in Chennai, Tamil Nadu India.
Built at a cost of 1,720 million, it is the largest library in South Asia. It is named after the former chief minister of Tamil Nadu, C. N. Annadurai.
It is built by the then chief-minister of Tamilnadu, Kalaignar M. Karunanidhi.
Now the present chief Minister J Jayalalitha has come out with a Thuglak like idea to change and transform the library into a child care hospital. This move has evoked strong opposition from literary persons, writers and authors of the Tamil world. They have launched a online petition to block the move by the Tamil Nadu Government. Those who have signed include veteran Tamil scholars, Sahithya Academy award winners, writers, authors and literary giants such as Ashok Mithran, Sa Kandasamy, Ponneelan, Indra Parthasarathy, Nanjil Nadan, Pirapanjan, Sirpi Balasubramaniam, Gnani Sankaran, Tamil Selvan, Melanmai Ponnusamy, Natarajan and Vasanthi.
Vasanthi, Gnani and some others have been all along ardent supporters of J Jayalalithaa. Vasanthi has written a biography of J Jayalalithaa. It is yet to be published and eagerly waited by everybody.
Let us hope that the Tamil Nadu Government drops its plan for converting a library into an hospital.Madhavraj has brought out an excellent post in the subject. The following are the details:
முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு!
“சென்னை கோட்டூர்புரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அண்ணா நூலகம், விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக (Super Specialty Paediatric Hospital) மாற்றி அமைக்கப்படும்” என இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் பதவிக்கு வந்த பின்னர், தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியதிலிருந்து இதுபோன்ற காரியங்களைத் தொடர்ந்து செய்து வருகிறார். இந்த மருத்துவமனைகளின் பின்னால் இருக்கிற நோயை தமிழகம் அறிந்தே வைத்திருக்கிறது.
ஜெயலலிதாவின் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு ஒட்டுமொத்த மக்களின் வரிப்பணமும், தமிழகத்தின் சில முக்கிய திட்டங்களும் இரையாகிக்கொண்டு இருக்கின்றன. இப்படி ‘கருணாநிதி கட்டியவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக மாற்றுவேன்” என மக்கள் முன்வைத்து தேதலில் வாக்கு பெறவில்லை, வெற்றி பெறவில்லை.
தேர்தல் வாக்குறுதிகளிலோ, அறிக்கையிலோ சொல்லியதை நிறைவேற்றுவதை விட்டு விட்டு, சொல்லாதவற்றையெல்லாம் ஜெயலலிதா ஒவ்வொன்றாகச் செய்து வருகிறார். வன்மமும், அதிகார துஷ்பிரயோகமும் தலைவிரித்தாடுகிறது.
கருணாநிதியை மதிக்கிறார், மதிக்காமல் போகிறார். அதுபற்றி நமக்கு கவலையில்லை. ஆனால் அறிவு சார்ந்த ஒரு நூலகத்தை மதிக்கவில்லை. நம்பி வாக்களித்த தமிழக மக்களையும் மதிக்கவில்லை. அதுபற்றி நமக்கு கவலை மட்டுமல்ல, ஆத்திரமும் உண்டு.
அரசின் இந்த முடிவுக்கு எதிராக ‘புத்தகம் பேசுது’ இதழ் ஒருங்கிணைப்பில் தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்கள் இன்று கூட்டாக அறிக்கை விடுத்திருக்கிறார்கள். நாமும் நமது எதிர்ப்பை தெரிவிப்போம் நண்பர்களே!
Madhavraj in his blog. Here
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றக் கூடாது என ‘புத்தகம் பேசுது’ இதழ் சார்பில் ஒரு ஆன்லைன் பெட்டிஷன், தமிழக முதலமைச்சருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது இங்கே:
http://www.change.org/petitions/chief-minister-of-tamil-nadu-miss-jjayalalithaa-to-withdraw-the-decision-of-shifting-anna-centenary-library
நண்பர்களே!, தாங்களும் இப்பெட்டிஷனில் கையெழுத்திட்டு, ஆதரவு திரட்டுங்களேன்
இவர்களையும் படியுங்கள்:The following is the content of the online petition:
“ஒரு நாள் கடற்கரை கண்ணகி சிலைபோல் வள்ளுவரும் காணாமல் போக ஏற்பாடாம்.என்ன செய்யப் போகிறாய் தோழா?”
- சு.பெ.அகத்தியலிங்கம்
“பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.”
- ச.தமிழ்ச்செல்வன்
“அறிவு வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் புத்தகங்களை எட்டாத இடத்தில் வைத்துவிட்டு, இலவசமாய் ஆடுகளையும், மாடுகளையும் கொடுத்தால் என்ன அர்த்தம்..?”
-புதுவை ராம்ஜி
“உள்ளிருந்த ஒவ்வொரு நிமிடமும் இது நான் வாழும் இடத்தில், வாழும் காலத்தில் அமைந்திருக்கிறது, அறிவுசார் எதிர்காலம் அமைந்திட ஆட்சியாளர்களுக்கும் கூட அதிசயமாய் எண்ணம் தோன்றிவிடத்தான் செய்கிறது என்று எண்ணி பெருமிதம் கொண்டிருந்தேன். எந்த ஆட்சியில் அது கட்டப்பட்டிருந்தாலும் என் உணர்வு இதுவாகத்தான் இருந்திருக்கும்.”
-ஆதிமூலகிருஷ்ணன்
நண்பர்களே!
சென்னை கோட்டூர்புரத்தில், 8 ஏக்கர் நிலப் பரப்பில் மக்கள் பணம் 180 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்ட அண்ணா நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டிடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.
ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எனும் சிறப்புகொண்ட இந்த அண்ணா நூலகத்தை விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக (Super Specialty Paediatric Hospital) மாற்றி அமைக்கப்படும்” என இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 1.1.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தலைமைச் செயலகக் கட்டடத்தைத் தொடர்ந்து இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகமும் மாற்றப்படுவது அரசியல் பகையுணர்வின் அப்பட்டமான வெளிப்பாடாகவே இருக்கிறது.
குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவது என்பது வரவேற்கத்தக்கதே. அதற்குப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து புதிதாக ஒரு கட்டடத்தை அங்கு எழுப்ப முடியும். அதற்காக தேவையான உள்கட்டமைப்போடு உருவாக்கப்பட்ட ஒரு நூலகத்தை மாற்ற வேண்டியது இல்லை. மேலும், அண்ணா நூற்றாண்டு நூலகம் தற்போது அமைந்திருக்கும் இடம், அதனைப் பயன்படுத்துவோருக்கு எவ்வகையிலும் இடைஞ்சலாக இல்லை. இதிலேயே மேற்கொண்டு பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி வலுப்படுத்தவும் முடியும்.
ஆகவே, தமிழக அரசு தனது அமைச்சரவை முடிவைக் கைவிட்டு, நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகிறோம்.
[Your name] Here
No comments:
Post a Comment