Pages

Friday, December 31, 2010

Binayak Sen and sedition


ப்போது அவர் ஒரு ராஜதுரோகி. ஒரு மனிதாபிமானியாக, நல்ல மருத்துவராக, மனித உரிமைகள் இயக்கச் சேவகராக மட்டுமே இதுவரை அறியப்பட்டிருந்த 58 வயதான டாக்டர் பினாயக்சென்னுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. சட்டீஸ்கர் மாநிலத்தின் இந்த கீழ்க்கோர்ட்டு தீர்ப்பு இப்போது நாடெங்கிலும் கிழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. சமூக ஆர்வலர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என பலதரப்பிலிருந்தும் கண்டனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. மே.வங்கத்தைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற டாக்டர் அம்ரித்யா சென்  மனமுடைந்தவராய் “நீதியின் கருச்சிதைவு” என்று கடுமையான வார்த்தைகளோடு தன் கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பினாயக்சென் 2007ம் வருடம் மார்ச் 14ம்தேதி சட்டீஸ்கர் மாநிலக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மாவோயிஸ்டுகளுக்கு கூரியராக செயல்பட்டார் என்பதும், மாவோயிஸ்டுகள் மீது அனுதாபம் கொண்டு இருந்தார் என்பதும் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள். அவரது வீட்டைச் சோதனையிட்டு, அதற்கான இரண்டு கடிதங்களையும், சில பிரசுரங்களையும் கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஆதாரங்களாக சமர்க்கப்பட்டு இருக்கின்றன. அந்த ஆதாரங்கள் போலியானவை என்றும், சாட்சியங்களால் உறுதிசெய்யப்படவில்லையென்றும் பினாயக்சென் ஆதரவாளர்கள் சொல்கின்றனர். இருந்தபோதும் இந்தியக் குற்றவியல் சட்டத்தின் செக்‌ஷன் 124A  அவர் மீது பாய்ந்திருக்கிறது.


ஆதாரங்களும், சாட்சியங்களும் இங்கு தேவையற்றவை. நிஜத்தில் டாக்டர் பினாயக் சென யாருக்கு ஆதரவாளராக இருந்தார் என்பது உலகுக்கே தெரிந்திருக்கிறது. அரசால் புறக்கணிக்கப்பட்ட விளிம்புநிலை மனிதர்களுக்கு சேவை செய்வதையே தன் வாழ்வாக கொண்டிருக்கிறார். அவர்களுக்கான குரலாக இருந்திருக்கிறார். பெரும் முதலாளிகளால் படுகொலை செய்யப்பட்ட சங்கர் குஹா நியோகி எனும் தொழிற்சங்கத் தலைவரின் பெயரால் மருத்துவமனை கட்டி எழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வந்திருக்கிறார். இதற்காக பல அமைப்புகள் அவரைப் பாராட்டி, விருதுகள் வழங்கி கௌரவித்திருக்கின்றன.

ராஜதுரோகம், ராஜதுரோகம் என இந்த கோர்ட்டுகளும், இந்த அரசும் அவர்களுக்கான அகராதியில் சொல்லிவிட்டுப் போகட்டும். உண்மையில் யார்

ராஜதுரோகி என்பதற்கான மக்கள் அகராதி ஒன்று இருக்கிறது. உழைக்கும் மக்களைச் சுரண்டுகிறவர்கள், மக்களைப் பிரித்து ஆளத் துடிப்பவர்கள், நாட்டின் வளங்களைச் சுரண்டுபவர்கள், விவசாயிகளின் வாழ்வை அபகரித்து அவர்களை தற்கொலை விளிம்புகளுக்குத் தள்ளியவர்கள், அரசுத் திட்டங்களில் முறைகேடுகள் செய்கிறவர்கள், ஊழல் செய்கிறவர்கள், குள்ள நரிகள், மொள்ளமாரிகள் எல்லாம் ராஜ துரோகிகள்.
இப்போது சொல்லுங்கள், யார் ராஜ துரோகி?

From Madhavraj's தீராத பக்கங்கள். More Here

Binayak Sen and Vedanta Resources

A time will soon come when Indian companies will begin to be sued in class action cases by both people in India and those overseas. Indian corporations with a global footprint will also suffer. Vedanta Resources Plc is a good example. I believe more businesses will begin to suffer legally and financially as the world at large begins to learn that they operate in a sledgehammer fashion in India, and present angelic faces elsewhere in the world.

From Sudeep Chakravarti's article in Open. More Here.

1 comment:

zafarRahmani said...

நீதி மன்றங்களே இன்று நீதியை விட்டு வேறு எல்லாபணிகளும் செய்கின்றனவோ என்ற சந்தேகம் சில நாட்களாக எனக்கு தோன்ற ஆரம்பித்துள்ளது. 
தேச துரோகம் செய்தவர்கள்
தேசத்தை, தேச மக்களை இன, மத, மொழி ரீதியாக துண்டாடி அதில் குளிர் காயந்து கொண்டிருப்பவர்கள் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கின்றனர். 
தன்னலம் பாராமல்
மனிதகுல சேவையாளர்கள் சிறைக்கொட்டடிகளில்
ஏதேனும் கலவரம் அல்லது
பயங்கரவாத தாக்குதலின் போது
குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் அணிந்திருந்தாலும் உயிர் விடுவது என்பது நாட்டில் நிகழ்ந்து கொண்டிருப்பது வருந்தத்தக்கது. 
"பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்ற முது மொழிதான் நினவுக்கு வருகிறது. 

Translate

Related Posts Plugin for WordPress, Blogger...