Pages

Showing posts with label JIH TN. Show all posts
Showing posts with label JIH TN. Show all posts

Thursday, May 12, 2011

இளைஞர் அணி அமைக்கப்படும் : அமீரே ஹல்கா அறிவிப்பு!


தமிழகத்தில் இளைஞர் அணி அமைக்கப்படும் என்று அண்மையில் தமிழகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜனாப் ஏ. ஷப்பீர் அஹ்மத் அறிவித்துள்ளார். ஜமாத்தின் இணையத்தளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் இது தொடர்பாகக் கூறியிருப்பதாவது:


தமிழகத்தில் இளைஞர் அமைப்பு உருவாக்கும் வாய்ப்பும், தேவையும் உள்ளதா?

தமிழகத்தில் இளைஞர்களை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.  SIO முழுக்க முழுக்க மாணவர்மயமாகி வருவதாலும், கல்வி வளாகங்களை மையமாக வைத்து பணி நடைபெறுவதாலும் இளைஞர்களுக்கான வேலைகள் காலியாக உள்ளது.  
கடந்த மீக்காத்தில் 2 வருடத்திற்கு முன்பே இளைஞர் அமைப்பு உருவாக்குவது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  இளைஞர் அமைப்பு சிறப்பாக உள்ள மாநிலங்களுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில் கேரளா சாலிடாரிட்டி, ஆந்திரா MPJ ஆகிய அமைப்புகள் செயல்படும் முறையை ஆய்வு செய்து ஆலோசனைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  
பிறகு தமிழகத்தில் இருக்கும் வாய்ப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.  கோவை, வாணியம்பாடி, சென்னை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருக்கும் வாய்ப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு ஆலோசனைக்கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது. இத்தனை மிக விரிவான ஆய்வுக்கு பிறகு ஆலோசனைக் கூட்டத்தில் அனைவரிடமும் இளைஞர் அமைப்பு உருவாக்க வேண்டும் என்ற ஒருமித்த சிந்தனை உருவானது.  அப்போது மீக்காத்தின் இறுதி கட்டத்தை அடைந்திருந்ததால் வருகிற மீக்காத்தில் ஆரம்பிக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.  ஆகவே இறைவன் நாடினால் வருகிற புதிய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.
More Here.

Translate

Related Posts Plugin for WordPress, Blogger...