சமூகத்தின் நாடித்துடிப்புகளை கச்சிதமாக அறிந்து, அதற்கேற்ப காய்களை நகர்த்தும் முதலாளித்துவத்தின் இப்போதைய அழுகுணி ஆட்டத்தில் அவர்தான் மதிப்பிற்குரிய ராஜா. ஊழலில் ஊறித் திளைத்த அதிகார வர்க்கத்தின் மீது சாதாரண மனிதனுக்கு கோபமும், வெறுப்பும் மண்டிக்கிடந்த வேளையில் அவரது வருகையை முதலாளித்துவ ஊடகங்கள் அறிவித்தன. தங்களது ஆக்டோபஸ் சக்தியால் ஒரே நாளில் அவர்தான் தேசத்தின் தலைவர் என்று அடையாளம் காட்டின. விடாமல் எந்நேரமும் அவரது பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. இரண்டாம் சுதந்திரப் போரை அவர் துவக்கி விட்டதாக கணிக்கின்றன.From Madhavraj's தீராத பக்கங்கள். More Here.
இந்த நாடகத்தின் ஆரம்பத்திலேயே ஒரு ஊழல் இருந்தது. சட்டங்களை வரையறை செய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய பாராளுமன்றம் இருக்கும்போது அதன் எல்லையை மீறினார் அன்னா ஹசாரே. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருக்கும்போது லோக்பால் மசோதாவை வரைவு செய்கிற குழுவில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்று அன்னா ஹசாரே கோரிக்கை வைத்தார். அப்படியொரு அதிகாரபூர்வமற்ற அதிகாரத்தை அவரே எடுத்துக்கொண்டார். உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் என்று நேரான வழிகளில் போராடுவதாய் சொல்லிக்கொண்ட அன்னா ஹசாரேவின் குரல் புறவாசல் வழியாக தான் இப்படி நுழையக் கதவை திறக்கும்படி அரசிடம் அடாவடியாக எழுப்பியது. பாராளுமன்றம், அதன் உறுப்பினர்கள், அமைச்சர்கள் மீது அவருக்கு நம்பிக்கையில்லையென்றால் முதலில் அவரது போராட்டம் அரசியல் கட்சிகளுக்கு எதிராக இருந்து தேர்தலை சந்தித்து, வென்று, பாராளுமன்றம் சென்று, சட்டத்தை தாங்கள் நினத்தது போல இறுதி செய்து, அமல் படுத்த முனைந்திருக்க வேண்டும். அப்படியெல்லையென்றால், இந்தப் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானதாக இருந்திருக்க வேண்டும். அதைச் செய்ய மாட்டார். இந்த முதலாளித்துவ ஊடகங்கள் அவரை ஒரே நாளில் குப்பையில் தூக்கி எறிந்துவிடும். அரசோ ‘தேசத் துரோகி’ என குற்றஞ்சாட்டி சிறையில் அடைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும்.
அதுவுமில்லாமல் இதுவுமில்லாமல் குறுக்கு வழியில், முதலாளித்துவத்தின் தேரோட்டவே அன்னா ஹசாரே விரும்புகிறார். லோக்பால் மசோதாவை இவரெல்லாம் சேர்ந்து வரைவு செய்வார்களாம். அதை பாராளுமன்றம் இறுதிப்படுத்துமாம். விளக்கெண்ணய்த்தனமாக இல்லை இது? இதற்குத்தான் இத்தனை செய்திகளும், ஆரவாரங்களும் பேரிரைச்சலாய் கேட்டுக்கொண்டு இருக்கிறது.
Thursday, June 09, 2011
Anna Hazare is the messenger of Big corporates
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment